நோன்பின் நிய்யத்
நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமழான ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹி தஆலா
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை அதாவாக அல்லாஹ்வுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.
நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ
அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமந்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஸ்கிக அஃப்தர்த்து வதகப்பல்மின்னி.
யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்ளவாயாக!
அனைவரும் கேட்க வேண்டிய துஆ
யா அல்லாஹ்! எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியப் பாக்கியமருள்வாயாக.
யா அல்லாஹ்! முழுமையான சமாதானத்தையும் நேர்வழியையும் எங்களுக்கு தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் உள்ள அகங்காரம், பொறாமை ஆகியவற்றை நீக்கி எங்களை காத்தருள்வாயாக.
யா அல்லாஹ்! எங்கள் பிழைகள் மற்றும் தவறுகளை உன் அருளால் மன்னித்தருள்வாயாக. ஹலாலான ரிஸ்க் தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! உன் கட்டளைகளின்படி வாழக்கூடியவர்களாக எங்களை ஆக்கிவைப்பாயாக.
யா அல்லாஹ்! எங்கள் தேவைகளை நிறைவேற்றி, மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாக எங்களை ஆக்குவாயாக.
யா அல்லாஹ்! கஷ்டங்களை சமாளிக்கும் பொறுமையும் மன அமைதியும் தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! வறுமை மற்றும் அனைத்து தீமைகளிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக.
யா அல்லாஹ்! சண்டை, சச்சரம், பொறாமை போன்றவற்றிலிருந்து எங்களை காப்பாயாக.
யா அல்லாஹ்! பயம் மற்றும் கடன் சுமைகளை நீக்கி எங்களை பாதுகாப்பாயாக.
யா அல்லாஹ்! எங்களின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக.
யா அல்லாஹ்! தக்வா, நல்லொழுக்கம் மற்றும் மனநிம்மதி தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! முழுமையான பாதுகாப்புடன் எங்களை காத்தருள்வாயாக.
யா அல்லாஹ்! சிறிய பெரிய எல்லா நோய்களிலிருந்தும் எங்களை காப்பாயாக.
யா அல்லாஹ்! இறையச்சமும் நேர்மையும் எங்களுக்கு தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நடக்க எங்களை பாத்திரப்படுத்துவாயாக.
யா அல்லாஹ்! எங்கள் பெற்றோர்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு அருள் புரிவாயாக.
யா அல்லாஹ்! மறுமை நாளில் எங்களையும் எங்கள் பெற்றோர்களையும் ஜன்னத்தில் சேர்த்தருள்வாயாக.
யா அல்லாஹ்! மறுமை நாளில் உன் அருளால் எங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவாயாக.
யா அல்லாஹ்! உன் திருப்தியை அடையக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக.
யா அல்லாஹ்! மரண வேளையின் வேதனைகளிலிருந்து எங்களை காப்பாயாக.
யா அல்லாஹ்! கப்ரில் முன்கர் மற்றும் நகீர் கேள்விகளை எங்களுக்கு எளிதாக்குவாயாக.
யா அல்லாஹ்! கியாமத் நாளில் உன் அருளின் நிழலில் எங்களை சேர்த்தருள்வாயாக.
யா அல்லாஹ்! ஜன்னத்துல் பர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நிலையாக சேர்த்தருள்வாயாக.
ரமலான் முதல் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ ارْحَمْنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
அல்லாஹும் மர்ஹம்னா பிரஹ்மதிக யாஅர்ஹமர் ராஹிமீன்
அருளாளர்களுக்கெல்லாம் அருள் புரிபவனே யா அல்லாஹ் உன்அருளை எங்களுக்கு அருள்வாயாக.
ரமலான் இரண்டாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا يَا رَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும் மக்ஃபிர்ஸனா துனூபனா யா ரப்பல் ஆலமீன்.
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக,
ரமலான் மூன்றாம் பத்து நாட்களில் ஓதும் துஆ
اللَّهُمَّ اعْتِقْنَا مِنَ النَّارِ وَادْخِلْنَا الْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِينَ
அல்லாஹும்ம அஃதிக்னா மினன்னாரி வஅத்ஹில்னல் ஜன்னத்த யாரப்பல் ஆலமீன்,
அகிலத்தின் பாதுகாவலனே யா அல்லாஹ் எங்களை நரகிலிருந்து விடுதலை செய்து சுவனம் நுழையச் செய்வாயாக.
லைலத்துல் கத்ர் இரவில் ஓதும் துஆ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும் இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ
யா அல்லாஹ் நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன். நீ மன்னிப்பதை விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக.